டி20 வரலாற்றில்... இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்!
முகமது ஹஃபீஸ்: 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் முகமது ஹஃபீஸ் 44 பந்துகளில் 61 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கிறது.
பாபர் அசாம்: 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஓப்பனர் பாபர் அசாம் 52 பந்துகளில் 68 ரன்களை அடித்தது, இது ஏழாவது இடத்தை பிடிக்கிறது.
முகமது ரிஸ்வான்: 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் நடந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் ஓப்பனர் முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்களை அடித்தது இதில் ஆறாவது இடத்தை பிடிக்கிறது.
யுவராஜ் சிங்: 2012ஆம் ஆண்டில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 36 பந்துகளில் 72 ரன்களை அடித்திருந்தது, இதில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறது.
கௌதம் கம்பீர்: 2007ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கௌதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்களை அடித்திருந்தது, இதில் நான்காவது இடத்தை பிடிக்கிறது.
விராட் கோலி: 2012ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி 61 பந்துகளில் 78 ரன்களை அடித்திருந்தது, இதில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.
முகமது ரிஸ்வான்: 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்களை அடித்திருந்தது, இதில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது.
விராட் கோலி: கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் மெர்போர்னில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிககு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 82 ரன்களை அடித்திருந்தது இதில் முதலிடத்தை பிடிக்கிறது.