ஒரு மக்களவை சபாநாயகருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறதா?
கடந்த முறை மக்களவை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா இந்த முறையும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களவையில் யார் பேச வேண்டும், யார் பேச கூடாது போன்ற அதிகாரங்களை சபாநாயகர் வைத்துள்ளார். மேலும் மக்களவையில் ஒழுக்கத்தை உறுதி செய்வது இவரது முக்கிய பணி.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை சபாநாயகர் பாதுகாக்கிறார். எந்தவித சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்து கொள்கிறார்.
மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறும் போது முட்டுக்கட்டை ஏற்பட்டால், பிரச்சினையைத் தீர்க்க சபாநாயகருக்கு வாக்களிக்க உரிமை உண்டு.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை சபாநாயகர் தான் தீர்மானிக்கிறார். மக்களவையில் ஏதேனும் எம்பி தவறு செய்யும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு.
சில குற்றங்களுக்காக எம்பியை தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகருக்கு உரிமை உண்டு. ஒத்திவைப்புத் தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றிற்கு சபாநாயகர் அனுமதி தேவை. எனவே தான் இந்த பதவிக்கு எப்போதும் போட்டி இருக்கும்.