2022 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா விளையாடும் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு இப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
அக்டோபர் 27-ம் தேதி தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் இந்தியா விளையாட உள்ளது. இது சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.
அக்டோபர் 30ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பெர்த் மைதானத்தில் விளையாட உள்ளது.
நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன. அடிலெய்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள போட்டி இந்தியா மற்றும் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் விளையாடவுள்ளது.