Fixed Deposit விகிதங்களை உயர்த்தியது IndusInd வங்கி: புதிய விகிதங்கள் இதோ
IndusInd வங்கி, 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வு கால அளவுள்ள FD-களில், இப்போது பொதுக் குடிமக்களுக்கு 3.50% முதல் 6.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 7.00% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
7 நாட்களில் இருந்து 30 நாட்களில் மெச்யூயூர் ஆகும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 3.50% வழங்குகிறது. 31 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 46 முதல் 60 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.25% வட்டியையும், 61 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.50% வட்டியையும் வழங்குகிறது. 121 முதல் 180 நாட்களுக்குள் முதிர்வு காலம் கொண்ட FDகளுக்கு இப்போது 4.75% வட்டியும், 181 மற்றும் 269 நாட்களுக்கான FD களுக்கு இப்போது 5.50% வட்டியும் கிடைக்கும்.
270 நாட்கள் அல்லது 354 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வங்கி 5.75% வட்டி விகிதத்தையும், 355 நாட்கள் அல்லது 364 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, 6.00% வட்டி விகிதத்தையும் IndusInd Bank வழங்குகிறது.
1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்களுக்கும் குறைவான FDகளுக்கு IndusInd வங்கி 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 1 வருடம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவான FDகளுக்கு 7.00% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி கிடைக்கும்.