சிட்டுக்குருவிகள் இப்படித்தான் வாழ்கிறதா?

Sun, 20 Mar 2022-11:13 am,

சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி நிற்கின்றன.  அதனால்தான் , வீடுகளில் குருவி கூடு கட்டினால், அவற்றை ஒருபோதும் கலைக்கமாட்டார்கள்.

 

பெரும்பாலும் சிட்டுக்குருவியானது வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும்.   மேலும் இன்றைய காலகட்டத்தில் நகர்ப் புறங்களிலும், மாநகரங்களிலும் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மேலும் இதுபோன்ற பெரும்பாலான குடியிருப்புகளில் வெளிக் காற்றானது ; வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியைப் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

 

கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் இனங்களில் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியாகியுள்ளன. அவற்றைத் தடுத்து நிறுத்தி, அப்பறவை இனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு, 2010ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

 

செல்போனின் உபயோகம் அதிகரிக்க தொடங்கிய நாள்முதல் சிட்டுக்குருவிகளின் அழிவும் அதிகரிக்க தொடங்கிவிட்டன.  அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது ; செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்சமான கதிர்வீச்சானது  சிட்டுக்குருவியின் கருவையே சிதைக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுதான்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link