நீரிழிவு நோயை தீர்க்கும் யோகா; இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் 5 ஆசனங்கள்

Tue, 21 Jun 2022-4:02 pm,

மர்ஜாரியாசனம் ( Marjariasana): குப்புற கவிழ்ந்த நிலையில், உடல் முன்னோக்கி நீட்டி கைகள் தரையில் வைக்கவும். பாதங்கள் சிறிய அகளவில் அகட்டி வைத்துக் கொள்ளலாம், முடிந்த வரை மேல் நோக்கி பார்க்கவும். முதுகு தண்டு லேசாக வளையட்டும்.

அதோ முகி மர்ஜாரி ஆசனத்தில் (Adho Mukhi Marjari Asana) குப்புற கவிழ்ந்த நிலையில், கைகளை தரையில் ஊன்றி வைக்கவும். பாதங்கள் சிறியதாக அகட்டி நிறுத்தலாம்தலையை கவிழ்த்து  உங்கள் நாபியில் கவனத்தை மையப்படுத்துங்கள்.

பஷ்சிகுோட்டனாசனத்தில் (Paschimottanasana) உக்கார்ந்த நிலையில், தரையில் கால்கள் முன்னோக்கி நீட்டியிருங்கள், நடுவில் உள்ள கால்களின் விரல்களைப் பிடிக்க முயற்சிக்கவும். உங்கள் கைமுட்டுகள் மடங்கி இருக்கட்டும். கர்ப்பிணிகள் ஸ்லிப் டிஸ்க் ஏற்பட்டவர்கள், ஆஸ்த்மா உள்ளவர்கள் அல்சர் நோயாளிகள் ஆகியோர் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

அதோமுகி ஸ்வனாசனம் (Adomukhi Svanasana):  முட்டு வளையாமல் கைகள் முன்னோக்கி வளைந்து நிற்கவும். உங்கள் உடல் படத்தில் பார்ப்பது போல் ஒரு எதிர் 'V' வடிவில் இருக்க வேண்டும்.

பாலாசனம் (Balasana) என்ற ஆசனத்தில் குப்புற படுத்தது போல் உட்காந்த நிலையில் கைகள் தலைக்கு மேலே உயர்த்தவும், பின்னர் சிவாசித்த வாறே, கைகளை முன்னே கொண்டு வந்து நெற்றியினால் தரையை தொடவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link