முதலீட்டு பணத்தை இரட்டிபாக்க 7 ஆண்டுகள் போதும்... கணக்கிடும் ஃபார்முலா இது தான்..!!
பணக்காரர் ஆக பயன்படுத்த வேண்டிய சூத்திரம் விதி 72 . இதனை பின்பற்றுவதன் மூலம், 7 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களில் உங்கள் பணம் எப்படி இரட்டிப்பாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்து வைத்திருந்தால், மூன்று மடங்கு அல்லது நான்கு மடங்கு கூட அதிகரிக்கலாம்.
கூட்டு வட்டியின் பலன்: நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் சேமிப்பில் நிலைத்தன்மையைப் பேணுவது மட்டுமே. கூட்டு வட்டியானது காலப்போக்கில் பணத்தை பன்மடங்காக்கும் வேலையை செய்யும்.
கூட்டு வட்டி செயல்படும் விதம்: நீங்கள் 100 ரூபாயை டெபாசிட் செய்து, அதற்கு ஆண்டுதோறும் 10 சதவீத வட்டியைப் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடம் கழித்து உங்களிடம் ரூ 110 இருக்கும். முதல் ஆண்டு உங்களுக்கு கிடைத்த வட்டி 10 ரூபாய்.
பணத்தை பெருக்கும் கூட்டு வட்டி: அடுத்த ஆண்டு, கூட்டுத்தொகை காரணமாக, ரூ.110க்கு 10 சதவீத வட்டி கிடைக்கும், இதன் மூலம் உங்கள் பணம் ரூ.121 ஆக அதிகரிக்கும் அடுத்த ஆண்டு, 121 ரூபாய்க்கு 10 சதவீத வட்டி கிடைக்கும். காலப்போக்கில் உங்கள் பணம் வியக்கத்தக்க வகையில் அதிகரிக்கும்
பணம் இரட்டிப்பாகும் விதி: உங்கள் சேமிப்பு எப்போது இரட்டிப்பாகும் என்பதைக் கணக்கிடுவதற்கான பொதுவான விதி - விதி 72 ஆகும். இது நிதித் துறையில் வருமானத்தை கணக்கிட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பணத்தை இரண்டு மடங்காகும் விதி: நீங்கள் ஆண்டுக்கு 10 சதவீத கூட்டு வட்டியுடன் 100 ரூபாயை முதலீடு செய்தால், விதி 72ன் படி, இந்த முதலீடு இரட்டிப்பாக்க 72/10 = 7.2 ஆண்டுகள் ஆகும். அதாவது1 லட்சம் முதலீடு செய்தால், ஏழு வருடங்களில் 2 லட்சமாக அதிகரிக்கும்
பணம் மூன்று மடங்காகும் விதி: விதி 114- உங்கள் பணம் எத்தனை ஆண்டுகள் மும்மடங்காகும் என்பதைக் கண்டறிய, நீங்கள் பெற்ற வட்டியை 114 ஆல் வகுக்க வேண்டும். நீங்கள் ஆண்டுதோறும் 8 சதவீத வட்டியைப் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பின்னர் 114 ஐ 8 ஆல் வகுக்க வேண்டும். 114/8= 14.25 ஆண்டுகள், அதாவது உங்கள் பணம் 14.28 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும்.
பணம் நான்கு மடங்காகும் விதி: விதி 144- விதி 144 எத்தனை ஆண்டுகளில் உங்கள் பணம் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று கூறுகிறது. நீங்கள் 8 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், உங்கள் பணம் 18 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்கும். 144/8= 18 ஆண்டுகள்.