iPhone: ஐபோன் 16 விலை இவ்வளவா? ஆத்தாடி! தங்க விலையாவது குறைச்சலா இருக்கும் போல?
செப்டம்பரில் அறிமுகமாகவிருக்கும் ஐபோன், நான்கு மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கலாம்: iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகிய நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பல்வேறு காரணங்களால், புதிய ஐபோனின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏன், எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துக் கொள்வோம்
உற்பத்திச் செலவு அதிகரிப்பு, ஐபோன் 16இன் விலையை அதிகமாக்கியிருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள், உற்பத்தி செலவுகளில் எதிரொலிக்கிறது
ஐபோன் 16 சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும். ஏனென்றால், கடந்த ஆண்டு அமெரிக்க சந்தையில் eSIM ஐபோன் 15 மாடல்கள் மட்டுமே அறிமுகமாகின, எனவே, eSIM-மட்டும் ஐபோன் 16 மாடல்கள் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிம் கார்டு இல்லாத போனாக ஐபோன் 16 உலக அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும் ஊகிக்கப்படுகிறது. இதுவும் ஐபோன் 16 மீதன எதிர்பார்ப்புகளை அதிகமாக்கியிருக்கிறது
ஐபோன் 16 சீரிஸ் விலை எவ்வளவு? என்பதைத் தெரிந்துக் கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அமெரிக்காவில் ஐபோன் 16 சீரிஸ் விலை இப்படி இருக்கும் என்று அனுமானிக்கின்றனர். iPhone 16 விலை - $799 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருக்கும்
iPhone 16 Plus விலை $899 டாலராகவும், $1,099 டாலர்கள் என்ற விலையில் iPhone 16 Pro விற்கப்படலாம்
iPhone 16 Pro Max விலை $1,199 டாலர்களாக இருக்கலாம்