தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!

Thu, 16 Nov 2023-8:13 pm,

IRCTC அறிமுகம் செய்துள்ள சுற்றுலா சிறப்பு ரயில் ரயில் தென்காசியில் தொடங்கி தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக பயணித்து கோவா செல்லும் கோவா / மூகாம்பிகா & தெற்கு கனரா ஸ்பெஷல் (Goa/Mookambika & South Canara Special) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், கொச்சுவேலியில் இருந்து மத்கோவன் வரை செல்கிறது.

கேரளாவில் புறப்படும் இந்த ரயில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக பயணித்து கொச்சுவேலியை அடைகிறது. கொச்சுவேலி என்பது கேரளாவிலும், மத்கோவன் என்பதும் கோவாவிலும் இருக்கிறது. கோவா / மூகாம்பிகா & தெற்கு கனரா ஸ்பெஷல் ரயிலில் பயணிப்பதன் மூலம்  உடுப்பி, மூகாம்பிகா கோயில், முருடேஸ்வர் கோயில், சிருங்கேரி, ஹோரனாடு ஆகிய ஆன்மீக தலங்களை தரிசிக்கலாம். 

பாரத கவுரவ் சிறப்பு ரயில் வரும் டிசம்பர் 7ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை சென்றடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போடனூர், பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு ஜங்ஷன், உடுப்பி, கர்வார் வழியாக டிசம்பர் 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மத்கோவன் சென்றடையும். 

மறுமார்க்கத்தில் டிசம்பர் 10ம் தேதி இரவு 7 மணிக்கு மத்கோவனில் இருந்து புறப்படும் பாரத கவுரவ் எக்ஸ்பிரஸ், கர்வார், உடுப்பி, மங்களூரு, பாலக்காடு, போடனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, கொல்லம் வழியாக டிசம்பர் 12ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கொச்சுவேலியை வந்தடையும்.

 

கோவா / மூகாம்பிகா & தெற்கு கனரா ஸ்பெஷல் ரயிலுக்கான முன்பதிவிற்கு www.irctctourism.com என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் மையத்தையும் தொடர்பு கொள்ளலாம். இதற்கான தொலைபேசி எண்கள் விபரங்களை IRCTC இணையதளத்தில் காணலாம்.

பாரத் கவுரத் ரயில் சேவை திட்டத்தின் கீழ் 50 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 489 கி.மீ என்ற அளவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்த ரயில்களில் 24,848 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியாவில் பிரபலமான சுற்றுலா, மற்றும் ஆன்மீக இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லும், பாரத் அகவுரவ் ரயில் சேவை மூலம் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link