வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலா செல்ல IRCTCயின் சொகுசு ரயில்
ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த டீலக்ஸ் சுற்றுலா ரயிலில், இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் முதல் ஏசி வகுப்பு வகுப்பு ரயில் பெட்டிகள் உள்ளன.
ரயிலில் நகரும் உணவகம் உள்ளது, அங்கு உங்களுக்கு விருப்பமான உணவு கிடைக்கும். ஒவ்வொரு டேபிளுக்கும் மேலே ஒரு சிறப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது,
வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை அதிகரிக்கும் பொருட்டு, இந்த டீலக்ஸ் ரயிலில் ரயில்வே பல சிறப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. ஒரு ரயில் பெட்டியில் நூலகமும் உள்ளது, அதில் மக்கள் உட்கார்ந்து புத்தகங்களைப் படிப்பதற்கான இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின்போது, வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே படிக்கும் அனுபவத்தை பெறலாம். ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே விளக்குகள் உள்ளன, நீங்கள் இரவில் படிக்க விரும்பினாலும் படிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஐ.ஆர்.சி.டி.சி வடகிழக்கு மாநிலங்களான காமக்யா கோயில் மற்றும் நபகிரகா கோயில் (Nabagraha Temple) (Guwahati)), காசிரங்கா தேசிய பூங்கா, எலிஃபாண்டா மற்றும் நவ்ஜலிகாய் நீர்வீழ்ச்சி (Nawjhalikai falls) ஆகிய பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த சுற்றுப்பயண தொகுப்பு மொத்தம் 10 நாட்கள் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் லாக்கர் வசதி உள்ளது. மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்
பயணத்தின் போது, ரயிலில் சேவை செய்யும் பணியாளர்கள் அனைவரும் சீருடையில் இருப்பார்கள். பணியாளர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பயணத்தின் போது சுற்றுலாப் பயணிகள் வசதியாக பயணிக்கலாம். பயணத்தின் போது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாப்பு காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.