உங்கள் முன்னாள் காதலியுடன் நட்பில் இருப்பது சரியா? தவறா?
பலரும் தங்களது முன்னாள் காதலன்/காதலியுடன் நட்பில் இருக்க விரும்புகின்றனர். தற்போது இந்த பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. நிறைய பேர் அதை செய்திருக்கிறார்கள்.
உங்கள் முன்னாள் காதலியுடன் நட்பில் இருக்க விரும்பினால் எது சரி, எது தவறு என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அவர்களுடன் அடிக்கடி வெளியில் செல்வது போன்ற தவறை செய்ய கூடாது.
முன்னாள் காதலியுடன் நட்பு கொள்ளும் முன்பு நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது ஒருவருக்கொருவர் உதவ விரும்புகிறீர்களா என்பதை மனதில் வைத்து கொள்வது அவசியம்.
நீங்கள் விரும்பிய ஒருவருடன் நீங்கள் நட்பு கொள்ள விரும்பினால், அவர்களிடம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசத் தொடங்குங்கள். இதன் மூலம் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறீர்கள். மேலும் நீங்கள் நண்பர்களாக மட்டும் இருக்க பழகிக்கொள்ளுங்கள்.
உங்கள் இருவருக்கும் எது சரி என்று தோன்றுகிறதோ அதைப் பற்றி பேசுவது நல்லது. குறிப்பாக கடந்தகால உறவுகளைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
நீங்கள் இருவரும் எதற்காக பிரிந்தீர்கள் என்பதை பற்றி நிறைய பேச வேண்டாம். இருவரும் தங்களது சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வது நல்லது.