ஜிலேபியை பிச்சு போட்ட மாதிரி... இல்ல இல்ல `கு` மாதிரி - Threads லோகோ எதை குறிக்கிறது?

Thu, 06 Jul 2023-8:13 pm,

ட்விட்டரை போன்றே ஒரு மைக்ரோ பிளாகிங் பிளாட்ஃபார்மை மெட்டா நிறுவனம் இன்று தொடங்கியது. இன்ஸ்டாகிராம் தொடர்புடன் இந்த 'Threads' அறிமுகப்படுத்தப்பட்டது. 

ட்விட்டரில் ஒரு பதிவுக்கு 280 எழுத்துகள் என்ற நிலையில், 'Threads'-இல் 500 எழுத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த Threads செயலி தொடங்கப்பட்டு முதல் ஏழு மணிநேரத்திலேயே 10 மில்லியன் (1 கோடி) பயனர்களை உலகம் முழுவதும் இருந்து பெற்றது என மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவரின் Thread கணக்கில் தெரிவித்துள்ளார். 

இதில், Thread செயலியின் லோகோ தற்போது பல பேச்சுகளை கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் காலையில் இருந்து Threads செயலியில் அரட்டையடித்து வரும் நிலையில், அதன் லோகோ குறித்தும் பல்வேறு தியரிகளை முன்வைத்து வருகின்றனர். 

 

அதாவது, Threads செயலியின் லோகோ தமிழ் எழுத்தான 'கு' போன்று உள்ளதாக தமிழ்நாட்டு நெட்டிசன்கள் ஒரு புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். அதற்கு முன், அந்த லோகோ '@' என்ற எழுத்துரு போன்ற உள்ளதாக கூறப்பட்டது. 

 

தமிழை போலவே, மலையாளத்தின் 'த்ரா' என்ற உச்சரிப்புடன் வரும் எழுத்தை, 90 டிகிரிக்கு திருப்பி பார்த்தால் Thread செயலியின் லோகோ போன்று இருக்கும் எனவும் சிலர் கூறிவருகின்றனர். 

இந்த நகைச்சுவை ஒருகட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் சென்றுவிட்டது. சிலர் ஜலேபி புகைப்படத்தை பகிர்ந்து, இதுதான் இந்த லோகோ உருவாக்கப்படுவதற்கான காரணம் என கேலி செய்து வருகின்றனர். ஆனால், அந்த லோகோ குறித்து மெட்டா நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link