ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மும்பையில் நடைபெற இருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு சடங்குகளும் கொண்டாட்டங்களும் தினமும் நடைபெற்று வரும் நிலையில், நேற்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டரனர். இதில் உலகின் முன்னணி பாப் பாடகரான ஜஸ்டின் பெய்பரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
சங்கீத் நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் கவர்ந்த நிலையில், முக்கியமாக முகேஷ் அம்பானியின் மகளும், மணமகன் ஆனந்த் அம்பானியின் மூத்த சகோதரியுமான இஷா அம்பானி பிரமாலின் ஆடைகளும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
ஆம், நீங்கள் படித்தது சரிதான். நேற்றை சங்கீத் நிகழ்வுக்கு மட்டும் இஷா அம்பானி மூன்று ஆடைகளை அணிந்துள்ளார். இந்த மூன்று ஆடுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஷன் ஸ்டைலிஸ்டான அனிதா ஷ்ராஃப் அடாஜானியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஷா அம்பானியின் அந்த மூன்று ஆடைகளின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்துள்ளது.
இஷா அம்பானி அவரின் முதல் லுக்கில், Schiaparelli என்ற இத்தாலிய ஃபேஷன் நிறுவனத்தின் டேனியல் ரோஸ்பெர்ரீ என்பவரால் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஆடையை அவர் அணிந்திருந்தார். நீல நிற சேலையுடன், வெள்ளி நிற பிளவுஸ் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
Falguni Shane Peacock எனும் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர் இஷா அம்பானியின் இரண்டாவது உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இது சிவப்ப நிறத்திலான லெஹங்கா ஆடையாகும். இதில் அழகான கைவேலைப்பாடுகள், அரிய கற்கை, நுணுக்கமான நூல் வேலைப்பாடுகள் அந்த ஆடையை இன்னும் மேருகேற்றின எனலாம். பாரம்பரிய திருமணத்தில் இந்த ஆடை முக்கியத்துவம் பெறுகிறது.
இஷா அம்பானியின் மூன்றாவது உடை மார்ட்ன் லெஹங்கா ஆகும். இதனை இந்திய ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிமைபத்துள்ளார். இரண்டு டோன்கள் சில்வர் நிறத்தில் லெஹங்கா ஸ்கேர்ட்டும், ஒரு தோள்பட்டை பகுதியுடன் கூடிய சிலவர் மற்றும் எமரால்ட் கிரீன் நிறத்தில் பிளவுஸ் வடிவமைக்கப்பட்டது. அந்த தோள்பட்டை பகுதியில் எமரால்ட் கிரீன் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டுள்ளன.