ஜியோ ஐபிஎல் ஆஃபர்! 49 ரூபாய் விலையில் ஐபிஎல் போட்டிகளை தடையில்லாமல் பார்ப்பது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ தொடங்கியதில் இருந்து எப்போதும் அதிரடி பிளான்களை அறிவித்துக் கொண்டே இருக்கும் அம்பானி, இப்போதும் ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் தடையில்லாமல் பார்க்க சூப்பரான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதாவது கிள்ளிக் கொடுக்கிற பழக்கமே இல்லாமல் அள்ளிக் கொடுக்கிற அம்பானி லேட்டஸ்டாக அறிவித்திருக்கும் 49 ரூபாய் திட்டத்தைப் பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டமானது 25ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது டேட்டா வவுச்சர் பிளான் ஆகும். இந்த திட்டம் வேண்டும் என்றால் உங்களிடம் பேஸிக் பிளான் செயலில் இருக்க வேண்டும். அதேபோல் ஜியோவின் இந்த ரூ.49 திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் மட்டுமே.
இதே திட்டத்தை ஒரு நாள் வேலிடிட்டியில் ஏர்டெல் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் 20ஜிபி டேட்டா மட்டுமே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
49 ரூபாய் வாங்கக்கூடிய இந்த திட்டத்தைப் பொறுத்தவரை ஏர்டெல் மற்றும் ஜியோவின் திட்டங்களுக்கு இடையே 5 ஜிபி வித்தியாசம் உள்ளது. ஜியோவிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பல டேட்டா வவுச்சர்கள் உள்ளன. இந்த திட்டம் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவைப் பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ஒரு நாள் வேலிடிட்டியில் நீங்கள் இந்த திட்டத்தை முழுவதுமாக பயன்படுத்தவில்லை என்றால் பயன்படுத்தப்படாத டேட்டாவின் அளவு காலாவதியாகிவிடும். உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவை என்றால், ரூ.222 திட்டத்திற்கும் செல்லலாம். இந்த திட்டமானது 50ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
இதன் செல்லுபடியாகும் காலம் பேஸிக் பிளான் முடிவடையும்போது இந்த டேட்டா பிளானும் முடிவடைந்துவிடும். ரூ.444 மற்றும் ரூ.667 டேட்டா வவுச்சர்களும் உள்ளன, இதன் மூலம் முறையே 60 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு 100ஜிபி மற்றும் 150ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டங்கள் மூலம் நீங்கள் ஐபிஎல்லை எந்த தொந்தரவும் இல்லாமல் பார்க்கலாம்.