பிறந்தநாளில் புது அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்!

Mon, 19 Jun 2023-5:52 pm,

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், காஜல் அகர்வால். 

தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர், திருமணம்-குழந்தை என செட்டிலாகி விட்டார். இதனால் இவர் நடிப்பதில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார் காஜல். 

காஜல், சத்தியபாமா என்ற புதுப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இவரது பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், காஜல். 

இவர் இனி நடிக்க வரமாட்டார் என்று எண்ணிய ரசிகர்களை தனது புது அறிவிப்பால் காஜல் அசர வைத்துள்ளார். 

காஜலை இந்தியன் 2 படத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

காஜலுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link