மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் இவர்களுக்கு மட்டும் சிறப்புரிமை - அரசு முக்கிய அப்டேட்
தமிழ்நாடு அரசு கொடுக்கும் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) பெற சில வரம்புகள் இருக்கின்றனர். ரேஷன் அட்டை வைத்திருகுகம் பெண்கள் மாதந்தோறும் பெறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, வீட்டில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும்.
அரசு கொடுக்கும் வேறு உதவித் தொகை பெறும் பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட மாட்டார்கள். வருமானவரி வரம்பு, கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஜிஎஸ்டி செலுத்துபவர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு வரம்பு இருக்கிறது.
ஆனால் சிலருக்கு மட்டும் கலைஞர் உரிமைத் தொகை பெற அரசு விலக்கு கொடுத்திருக்கிறது. அவர்கள் தமிழ்நாடு அரசின் வேறு உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்களாக இருந்தாலும், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்ந்து ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகை பெறலாம்.
அதாவது, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மறப்பு நோய் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் உதவித் தொகை பெறுபவர்களாக இருந்தாலும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும்.
பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
எனவே, இதுவரை இந்த விவரங்கள் தெரியாமல் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற்றுக் கொள்ளுங்கள். அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டால், அவர்களின் சிறப்பு அனுமதியின்பேரில் உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.