இந்தியன் 2 படத்தால் கார்த்தியின் ஜப்பான் படத்தில் பெரிய மாற்றம்!
ராஜு முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினம் தயாரிப்பில் உருவாகிவரும் ஜப்பான் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கார்த்தியின் பிறந்தநாளான மே 25 அன்று வெளியிடப்பட்டது.
'ஜப்பான்' படப்பிடிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பணியாற்றிய நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக மாற்றப்பட்டு இருக்கிறார்.
'ஜப்பான்' படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் விலகியதற்கான காரணம் 'இந்தியன்-2' படம் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் 'இந்தியன்-2' படத்திலும் ரவிவர்மன் தான் ஒளிப்பதிவாளராக இருந்து வந்ததால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகினார்.
'ஜப்பான்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சுனில், விஜய் மில்டன் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
கார்த்தியின் 'ஜப்பான்' படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் படங்களுக்கு கடும் போட்டியை இப்படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.