ஆடி மாதத்தில் சிவன் ருத்ரதாண்டவம் ஆடுகிறாரா? கேதார்நாத் மேக வெடிப்பு! பீதியில் மக்கள்!
கேதார்நாத் பகுதியில் மேகவெடிப்பு ஏற்படுவது அடிக்கடி நிகழும் ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற இயற்கை பேரிடரில் சிக்கி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
சிவனுக்கு உரிய ஜோதிர்லிங்கத் தலங்களில் கேதார்நாத் முக்கியமானது. கேதார்நாத் மிகவும் உயரத்தில் இருப்பதால், குளிர்காலத்தில் இங்கு யாரும் வரமுடியாது. ஏப்ரல் முதல் நவம்பர் வரை மட்டுமே பொதுமக்களின் தரிசனத்திற்காக கோவில் திறாக்கப்படுகிறது.
2013ம் ஆண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, கோவிலின் பின்புறத்தில் ஏற்பட்டபோதிலும், கோவிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் மிக உயரமானது. இது இமயமலையில் மந்தாகினி மற்றும் சரஸ்வதி நதியின் தலைப்பகுதியில் அமைந்துள்ளது.
கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஸ்கந்த புராணத்தில் உள்ள தகவல்களின்படி, தற்போதுள்ள கோவிலின் கட்டிடம் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாக நம்பிக்கை.
ஜோதிர்லிங்கம் கோவிலுக்குள் கூம்பு வடிவ பாறை வடிவில் உள்ளது - சிவபெருமான் சதாசிவ வடிவில் உள்ளார் .
கேதார்நாத்தில், சிவலிங்கம் முக்கோண வடிவ ஜோதிர்லிங்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது