எனக்கு நிறைய முறை கல்யாணம் ஆகிருச்சு - கீர்த்தி சுரேஷ்
உதயநிதிஸ்டாலின் நடிப்பில் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷூம் நடித்திருக்கிறார்.
இந்த புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கும் அவர் சமூகவலைதளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் குறித்து பேசியிருக்கிறார்.
அவர் பேசும்போது, சமூக ஊடகங்களை தான் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் அதில் என்னைப் பற்றி வரும் விஷயங்கள் சில வருத்தமடைய செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனக்கு கல்யாணம் ஆனதாகவும், காதலர் யார் என்பது குறித்தெல்லாம் பல முறை செய்திகள் வெளியாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனக்கு கல்யாணம் ஆனால் நானே வெளிப்படையாக அறிவிக்கப்போகிறேன், ஆனால் அதற்குள் இவர்கள் அதில் காட்டும் ஆர்வம் ஏன் என்று தான் தெரியவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.