கொரோனாவுக்கு பிறகு அதிக வருமானம் குவித்து சர்வதேச சாதனை செய்த Monster KGF 2

Sat, 23 Apr 2022-4:57 pm,

தென்னிந்திய திரைப்படம் ஒன்று வட இந்தியாவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் கருத்துப்படி, கேஜிஎஃப் 2 திரைப்படம் இரண்டு வாரங்களில் ஹிந்தி பெல்ட்டில் 200 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது மற்றும் வார இறுதி 2 இல் ₹ 300 கோடியை நோக்கி நகர்கிறது.

(Photograph:Twitter)

சமீபத்திய தகவல்களின்படி, கேஜிஎஃப் 2 வெளியான முதல் வாரத்தில் தென்னிந்தியாவில் மட்டும் மொத்தம் 1.5 கோடி பேர் பார்த்துள்ளனர்.

தென் மாநிலங்களில், கர்நாடகாவில் 40 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 30 லட்சம் பேரும், கேரளாவில் 25 லட்சம் பேரும், ஆந்திரா/தெலுங்கானாவில் 50 லட்சம் பேரும் படத்தைப் பார்த்துள்ளனர்.

தமிழகத்தில், கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

UAE/GCCஇல், உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய தென்னிந்திய திரைப்படம் 'கேஜிஎஃப்' அத்தியாயம் 2. சஞ்சய் தத் நடித்த இப்படம் உலக அளவில் வாரத்தின் முதல் 2 படங்களில் இடம்பிடித்துள்ளது. இப்படம் மலேசியாவில் இந்த வாரம் டாப் ஒன் திரைப்படமாக மாறியுள்ளது.

(Photograph:Twitter)

'கேஜிஎஃப்' அத்தியாயம் 2 பாக்ஸ் ஆபிஸின் ராஜா என்றே சொல்லலாம். நடிகர் யஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்திற்கு அருமையான தொடக்கம் கிடைத்துள்ளது. தற்போது முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது.

இப்படம் உலகம் முழுவதும் வெளியான முதல் வாரத்தில் சுமார் 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

(Photograph:Twitter)

நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் இந்தி பதிப்பு, பிரபாஸின் 'பாகுபலி 2', சல்மான் கானின் 'டைகர் ஜிந்தா ஹைன்' மற்றும் பிற பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கடந்து ₹ 250 CR ஐ மிக வேகமாக எட்டிய படம்.

(Photograph:Twitter)

''#KGF2 மிக வேகமாக ₹ 250 கோடி வசூலைத் தொட்டது...

இது பிரபல படங்கள் ₹ 250 கோடி வசூலைத் தொட்ட விவரம். #KGF2: நாள் ; #பாகுபலி2: நாள் 8; #தங்கல்: நாள்; 10 #சஞ்சு: நாள் 10; #TigerZindaHai: நாள் 10 என்று தரண் அதாஷ் தனது ட்விட்டர் கணக்கில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்.

(Photograph:Twitter)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link