முத்தம் செய்யும் மாயம் இது! காதல் அதிகரித்தால் கலோரிகள் குறையும்
இரண்டு பேர் முத்தமிடும்போது உடலில் என்ன நடக்கும்? இது ரசாயன மாற்றம் பற்றிய தகவல். இருவரும் உதட்டில் முத்தமிடும்போது சராசரியாக 9 மி.கி தண்ணீர், 0.7 மி.கி புரதம், 0.18 மி.கி ஆர்கானிக் சேர்மங்கள், 0.71 மி.கி கொழுப்பு மற்றும் 45 மி.கி சோடியம் குளோரைடு செலவாகிறது. கூடுதலாக, ஒரு நிமிடத்திற்கு சுமார் 2 முதல் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. முத்தமிட 30 வகையான தசைகள் வேலை செய்கிறதாம்!
முத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உதட்டோடு உதடு பொருத்தி, பிரெஞ்ச் முத்தம் கொடுக்கும்போது, மூளையில் இருந்து பல இரசாயனங்கள் வெளியாகின்றன, இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது பதற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்
முத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருமாம்! இளமையில், உதடுகளில் தொடர்ந்து முத்தமிடுவது, காதல் மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துமாம்...
ஒருவரைத் தொடுவது ஏன் விசேஷமானது? நாம் ஒருவரைத் தொடும்போது, உணர்வுகள் பரிமாறப்படுகின்றன. உதடுகளால் ஒருவரைத் தொடும்போது, அதில் ஒரு தனித்துவமான உணர்வு பரிமாறப்படுகிறது. ஏனெனில் உதடுகள் மிகவும் அதிகமான உணர்திறன் கொண்டவை.
உதடுகளின் நுனியில் நரம்பு செல்கள் உள்ளன. பிறப்புறுப்பைத் தவிர, உதடுகளின் நுனியிலும் நரம்பு செல்கள் உள்ளன. உடலின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவு நரம்பு செல்கள் கிடையாது. உதடுகளில் இருக்கும் சுரப்பிகள், முத்தமிடும்போது தனித்துவமான வாசனையை உருவாக்குகின்றன.