Kitchen Hacks: வாழைப்பழத்தை நீண்ட நாள் அழுகாமல் பாதுகாக்க சில டிப்ஸ்
)
பொதுவாக வீட்டில் வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் மிகவும் அரிது. மிகவும் மலிவான என்பதோடு, ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆனால் வாழைப்பழங்களை அழுகாமல் அதை எவ்வாறு காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. வாழைப்பழத்தை ஒரு வாரத்திற்கு பிரெச்ஷாக வைத்திருக்க சில டிப்ஸ் இங்கே.
)
வாழைப்பழம் அழுகாமல் பாதுகாக்க, அதனை தொங்கவிடும் வகையில் ஹேங்கர்களை சந்தையில் இருந்து வாங்கி, அதில் வாழைப்பழத்தை தொங்கவிடவும். வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்கும்.
)
பொதுவாக உணவை ஃப்ரெஷ்ஷாக வைக்க ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம் ஆனால் வாழைப்பழத்தை ஒரு போதும் பிரிட்ஜில் வைக்க கூடாது. சாதாரண அறை வெப்பநிலையில் வைக்கவும்.
வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க இந்த வேக்ஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இதற்காக, வாழைப்பழத்தை மெழுகு காகிதத்தினால், சுற்றி அதனை முழுமையாக மூடி வைக்கலாம்
வாழைப்பழம் அதிக நாட்கள் அழுகாமல் இருக்க வேண்டுமானால், அதன் தண்டில் பிளாஸ்டிக் அல்லது செல்லோ டேப்பை சுற்றினால், வாழைப்பழம் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும்.
வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க வைட்டமின் சி மாத்திரை தண்ணீரில் கலந்து அதில் வாழைப்பழத்தை போட்டு வைக்கவும்.
(பொறுப்பு துறப்பு : இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் வீட்டுக் குறிப்புகள் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இதற்கு பொறுப்பேற்காது)