Kiwi இது ஞானப்பழம் அல்ல Immunity அதிகரிக்கும் ஆரோக்கிய பழம்...
எடை குறைக்க வேண்டுமா எங்கே கிவி? செரிமானத்தை அதிகரிக்க சிறந்தது எது? பதில்- கிவி பழம். வைட்டமின்கள், தாதுக்கள் என ஆரோக்கியத்தை பேணும் அற்புத சக்தியை கொண்டுள்ளது கிவி.
100 கிராம் கிவியில் 3 கிராம் ஃபைபர் மற்றும் 1.14 கிராம் புரதம் உள்ளது. இது ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. "இரண்டு கிவிகளை தினசரி சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்தில் 20 சதவிகிதம் கிடைக்கும். செரிமானத்திற்கும் பெருங்குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்" என்று டி.கே. பப்ளிஷிங் ஹவுஸின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகம் கூறுகிறது.
நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் போதுமான அளவு கிவி பழத்தில் உள்ளது. Advances என்னும் சஞ்சிகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, " கிவி பழத்தில்,வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் (carotenoids), பாலிபினால்கள் (polyphenols) மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் (dietary fibre) உள்ளன, இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும்."
ரத்த அழுத்தத்தைக் குறைக்க கிவி உதவும். நீண்ட கால பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற பிரச்சனைகளின் அபாயங்களையும் கிவி குறைக்கும்.
kiwi பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஆஸ்துமா, சளி என பல பிரச்சனைகளை கிவி குணப்படுத்தும்.