கோடிக்கணக்கான சம்பளத்தை இப்படித்தான் செலவு செய்கிறார் ஷிகர் தவான்
டெல்லியை சேர்ந்த ஷிகர் தவானின் செல்லப் பெயர் 'கப்பர்'. மின்னல் வேகத்தில் ரன் எடுப்பதில் கில்லாடி தவான். மைதானத்திற்கு வெளியேயும் தவானுக்கு பிராண்ட் மதிப்பு அதிகம். எம்ஆர்எஃப், ட்ரீம் 11, பிஎம்ஜி, பிக் பஜார், கனரா வங்கி, கார்னர்ஸ்டோன், ஆர் கே குளோபல், ஜாலி ரோஜர் மற்றும் ரோடியோ டிரைவ் என பிஸியாக இருக்கிறார் தவான்.
உலகின் சிறந்த வாகன உற்பத்தியாளர்களின் ஆடம்பர கார்களில் பலவற்றை வாங்கியிருக்கிறார் ஷிகர் தவான். சமீபத்தில் ஆடம்பரமான பிஎம்டபிள்யூ எம் 8 கூபே வாங்கியிருக்கிறார். இதன் விலை 2.18 கோடி ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மெர்சிடிஸ் ஜிஎல் 350 சிடிஐ சொகுசு எஸ்யூவி காரையும் தவான் வைத்திருக்கிறார்.
தவான் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நான்கு படுக்கையறைகள் கொண்ட சொகுசு மாளிகை வைத்திருந்தார். தற்போது டெல்லியில் தவான் வசிக்கும் ஆடம்பரமான வீட்டின் விலை 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாம்!
கைக்கடிகாரங்களில் ஷிகர் தவானின் ரசனை வித்தியாசமானது. பல கைக்கடிகாரங்களை வைத்திருந்தாலும், அட்மிரல்ஸ் கப் ஏசி-ஒன் 45 டைட்டானியம் மற்றும் தங்கத்திலான வாட்ச் அவருக்கு பிடித்தது.
கோவிட் -19 நெருக்கடியின் போது, தவான் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உட்பட தேவையான மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு ரூ. 20 லட்சம் நன்கொடை அளித்தார். டெல்லியில் ஒரு புதிய பிளாஸ்மா வங்கிக்கு ஹீமோனெடிக்ஸ் அஃபெரெசிஸ் இயந்திரத்திற்கும் அவர் நன்கொடை கொடுத்தார். மேலும் People for Animals என்ற லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவி செய்கிறார் ஷிகர் தவான்.
இந்திய கிரிக்கெட் வீரரின் பொழுதுபோக்குகளில் ஒன்று சுற்றுலா ஆஸ்திரேலியா மற்றும் மாலத்தீவுகளில் தனது விடுமுறையைக் களிப்பவர் தவான். டிஸ்னிலேண்டில் தனது குழந்தைகளுடன் அவர் இருந்த புகைப்படங்கள் வைரலாகின.