13 ஆண்டு கால iPhone பயணம்....மாறி வரும் அதன் LOOK..!!!

Thu, 22 Oct 2020-2:10 pm,

ஆப்பிளின் முதல் தொலைபேசி 3.5 அங்குல திரையில் வடிவமைக்கப்பட்டது. இது 412 412 MHz ARM செயலியுடன் தயாரிக்கப்பட்டது என்றாலும், மிகவும் சிறந்த ஸ்மார்ட் போன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.

ஐபோன் 5 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, மேலும் நான்கு மாடல்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் iPhone 5 இல் பல பெரிய மாற்றங்கள் காணப்பட்டன. முதல் முறையாக, தொலைபேசியின் திரை பெரிதாக்கப்பட்டது. இந்த ஐபோன் மாடல் 4 அங்குல திரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேகமாக சார்ஜ் செய்ய புதிய அம்சம் நிறுவப்பட்டது. இந்த மாடலில் தான் மெட்டலும், அதாவது உலோகமும் முதல்முறையாக தொலைபேசியில் பயன்படுத்தப்பட்டது.

 

ஆப்பிள் அதன் வடிவமைப்பு மற்றும் அளவை தொடர்ந்து மாற்றி வருகிறது. உலகெங்கிலும் சீன தொலைபேசிகளின் ஊடுருவல் அதிகரிக்கத் தொடங்கியபோது, ​​ஐபோன் தனக்கென்று ஒரு இடத்தை வைத்துக் கொண்டிருந்தது.  முன்பை விட iPhone 6 இல் பெரிய திரையை அறிமுகப்படுத்தியது. இந்த தொலைபேசியில் 4.7 அங்குல டிஸ்ப்ளே அளவை கொண்டிருந்தது.

சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, ஆப்பிள் மீண்டும் தனது புதிய தொலைபேசியைக் கொண்டுவந்தது. ஆனால், இந்த iPhone 7 என்னும் புதிய தொலைபேசியின் வடிவமைப்பில் நிறுவனம் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால் அதன் ஸ்பெஷல் சிவப்பு வண்ண தொலைபேசி மிகவும் பிரபலமானது. மேலும், முதன்முறையாக  வாட்டர்ப்ரூப் (Water Proof) தொலைபேசி என்பதால், இந்த அம்சம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

iPhone 7 அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டிற்குள் iPhone 8  அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும், ஆப்பிள் தனது தொலைபேசியின் உடல் பாகத்தை கண்ணாடியில் தயார் செய்தது. ஐபோன் 8 அதன் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சக்திவாய்ந்த A11 ப்ராசஸர் காரணமாக அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

உலகம் முழுவதும் 3-4 கேமராக்களுடன் புதிய ஸ்மார்ட்போன் தொலைபேசிகள் வரத் தொடங்கியபோது, ​​ஆப்பிள் நிறுவனமும், iPhone 11 இன் பின்புறத்தில் 2 கேமராக்களுடன் அதனை கொண்டு வந்ததது . நிறுவனம் முதன்முறையாக அகலம் அதிகம் உள்ள ஆங்கிள் கேமராக்களை அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 12 தான் லேட்டஸ்ட் ஐபோன் மொபைல்  மாடல். கடந்த பல மாதங்களாக, அதன் வருகைக்காக காத்திருந்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு, 6.1 அங்குல அளவிற்கு super retina XDR OLED டிஸ்ப்ளே புதிய தொலைபேசியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய தொலைபேசியில் A14 Bionic Chip ப்ராசஸர் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த தொலைபேசி இதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.  ஐபோன் பிரியர்கள், iPhone 12 க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link