உலகக் கோப்பை இவர்களில் ஒருவருக்கு தான் - 10 அணிகளின் கேப்டன்கள் யார் யார்?

Wed, 04 Oct 2023-5:01 pm,

Jos Butler: நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜாஸ் பட்லர் செயல்படுகிறார். இவரின் தலைமையில் கடந்தாண்டு ஐசிசிச டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. 

Kane Williamson: கடந்த உலகக் கோப்பையில் இரண்டாம் இடம்பிடித்த போது, நியூசிலாந்தை வழிநடத்திய கேன் வில்லியம்சனே இந்த உலகக் கோப்பை தொடரிலும் கேப்டனாக செயல்படுகிறார். இவரின் தலைமையில் 2021இல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அந்த அணி வென்றது. 

 

Rohit Sharma: தொடரை நடத்தும் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். இதுவரை எந்த ஐசிசி கோப்பையையும் இவர் தலைமையில் இந்தியா வெல்லவில்லை. கடந்த மாதம் ஆசிய கோப்பையை இந்தியா வென்றிருந்தது, ரோஹித் தலைமையில்தான். 

 

Pat Cummins: 5 முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் சாம்பியனான ஆஸ்திரேலியா அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். இந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை இவரின் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது குறிப்பிடத்தக்கது.

Babar Azam: பாகிஸ்தான் அணிக்கு உலகின் நம்பர் 1 பேட்டர் பாபர் அசாம் கேப்டனாக செயல்படுகிறார். கடைசியாக 1996இல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றிருந்தது.

 

Dasun Shanaka: 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியனான இலங்கை அணியை இம்முறை தசுன் ஷனகா தலைமை தாங்குகிறார்.

Temba Bavuma: இதுவரை ஐசிசி கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்காவுக்கு டெம்பா பவுமா கேப்டனாக உள்ளார். 

Shakib Al Hasan: உலகின் முன்னணி ஆல்-ரவுண்டரான ஷகிப் அல்-ஹாசன் வங்கதேச அணியை வழிநடத்துகிறார். 

Hashmatullah Shahidi: ஆப்கானிஸ்தான் அணியின் இடதுகை பேட்டர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி இந்த உலகக் கோப்பையில் அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். 

Scott Edwards: தகுதி சுற்று மூலம் தொடருக்குள் வந்த நெதர்லாந்து அணிக்கு ஸ்காட் எட்வார்ட்ஸ் கேப்டனாக உள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link