IRCTC விதிகளில் மாற்றம்... இனி ரயிலில் உணவு கிடைக்காதா.. உண்மை நிலை என்ன..!!

Wed, 09 Dec 2020-1:32 pm,

ரயில்வேயின் சில ரயில்களில் மட்டுமே பேண்ட்ரி கார் (pantry car) இருக்கும். அதிலும் புதிதாக சமைக்கப்பட்ட உணவு  கிடைக்காது. பேகேஜ்ட் உணவு (Packed food) மற்றும் சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள் (ready to eat food)  பயணிகளுக்கு கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது தவிர, பயணிகள் சில ரயில்களில் மட்டுமே பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீர், தேநீர், காபி ஆகியவற்றைப் பெற முடியும். இந்த சேவைகள் கிடைக்கும் ரயில்களின் பட்டியலை ரயில்வே வெளியிட்டுள்ளது, அதில் இந்த வசதிகள் கிடைக்கும்.

இந்திய ரயில்வே ஜூன் 1 முதல் தினமும் சுமார் 230 ரயில்களை இயக்குகிறது. பண்டிகை காலத்தை மனதில் கொண்டு, சில சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் ஐ.ஆர்.சி.டி.சி செய்தி அனுப்புகிறது. அதில் ரயில்களில் பயணிகளுக்கு இனி உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படாது. பயணிகள் அதை அவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ | ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..!!!

நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் பேன்ட்ரிகார் வசதி இருக்கிறதா இல்லையா என்பதை அறிய irctc -யின்  http://contents.irctc.co.in/en/ListofTrainswithPantryCar.pdf என்ற இணைப்பைக் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்

அதற்காக நீங்கள் உணவு கொண்டு வரவில்லை என்றாலோ, அல்லது கொண்டு வர மறந்துவிட்டாலோ நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பேண்டிரி கார் இல்லாத ரயில்களில் ட்ரெயின் சைட் வெண்டிங் வசதி ( Train side vending facility) வழங்கப்படுகிறது. இதன் கீழ்,  நீங்கள் முன்கூட்டியே முன்கூட்டியே ஆர்டர் செய்து, நீங்கள் விரும்பும் நிலையத்தில் உங்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும்.

 

ரயில்வே தற்போது தனது ஈ கேட்டரிங் சேவையான ஃபுட் ஆன் ட்ராக் சேவையையும்  (e-catering service Food on Track) நிறுத்தியுள்ளது. வழக்கமான நாட்களில், 1323 எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.ecatering.irctc.co.in/ இல் லாக்-இன் செய்வதன் மூலமாகவோ உங்கள் ஆர்டரை பதிவு செய்யலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link