ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..!!!

IRCTC டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்கள் முன் வரை கன்பர்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 

Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்கள் முன் வரை கன்பர்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். உண்மையில், COVID19 பரவலுக்கு முன்பாக கடைபிடிக்கப்பட்ட விதிகளை ரயில்வே மீண்டும் அமல்படுத்தியுள்ளது. ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இரண்டாவது ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கப்படும். கொரோன சமயத்தில் இரண்டு மணி நேரம் முன்னதாக ரிசர்வேஷன் சார்ட் தயாரித்து வந்தது.

1 /5

மண்டல ரயில்வேயின் தேவையை மனதில் கொண்டு, CRIS தனது சாஃப்வேரில் தேவையான மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது பயணிகள் ஆன்லைன் மற்றும் பிஆர்எஸ் டிக்கெட் கவுண்டர்களில் இருந்து கன்பர்ம் டிக்கெட்டுகளை இரண்டாவது ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கும் வரை முன்பதிவு செய்யலாம்.

2 /5

கொரோனா தொற்றுநோய் காரணமாக மேற்கொள்ளப்படும் லாக்டவுன் வரை, முன்னதாக முதல் ரிசர்வேஷன் சார்ட், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு செய்யப்பட்டது, அதே நேரத்தில் இரண்டாவது  ரிசர்வேஷன் சார்ட், ரயில் புறப்படுவதற்கு  30 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் முன்னதாக தயாரிக்கப்பட்டது. இனி இரண்டாவது ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கும் வரை அதாவது ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்கள் முன் வரை டிக்கெட் புக் செய்யலாம்.

3 /5

ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தால், பயணிகள் கரண்ட் புக்கிங்  கவுண்டரிலிருந்தே டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் ரயில் ரத்துசெய்யப்பட்டால், பயணிகள் ரயில்வேயின் பணத்தைத் திரும்பப்பெறும் விதிகளின் கீழ் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.

4 /5

முதல் ரிசர்வேஷன் சார்டில் ஒரு பயணிக்கு கன்பர்ம் டிக்கெட் இருந்து, அதை அவர் இரண்டாவது ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கப்படும் நேரத்தில் அவர் தனது டிக்கெட்டை கேன்சல் செய்தால், மற்றொரு பயணி இந்த காலியான இருக்கைக்கான டிக்கெட்டை ஆன்லைனில் அல்லது பிஆர்எஸ் கவுண்டர் மூலம் முன்பதிவு செய்யலாம்.

5 /5

முதலில் irctc.co.in வலை தளத்திற்கு சென்று உங்கள் IRCTC கணக்கை உருவாக்கவும். அங்கே தோன்றும் பக்கத்தில், நீங்கள் பயணம் செய்ய வேண்டிய இடம், பயண தேதி, வகுப்பு போன்றவற்றை நிரப்பவும். உங்களுக்கு முன்னால் உள்ள பட்டியலில் இருந்து, உங்கள் ரயில் மற்றும் வகுப்பைத் தேர்வுசெய்க, இங்கே எத்தனை இருக்கைகள் காலியாக உள்ளன என்பதைக் காணலாம். காலி இருக்கைகளின் அடிப்படையில், நீங்கள் டிக்கெட்டைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கே உங்களுக்கு கட்டணம் காண்பிக்கப்படும். உங்கள் கட்டணத்தை செலுத்துங்கள். டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், பதிவு செய்யப்பட்ட மின் அஞ்சல் முகவரி மற்றும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் மெசேஜ் மூலம் டிக்கெட் அனுப்பப்படும்.  

You May Like

Sponsored by Taboola