உங்கள் ராசிக்கு ஏற்ற ரத்தினம் எது ! 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட கல் விபரம் இதோ..!
மேஷ ராசி: மேஷத்திற்கான ராசிக்கல் பவளம். செவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டவர்கள் பவள கற்களை அணியலாம். வைரம் மற்றும் புஷ்பராக கல்லும் அணியலாம்.
ரிஷப ராசி: சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்காரர்கள் வைரம் மற்றும் பச்சை அணியலாம்.
மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்களை ஆளுவது அறிவார்ந்த கிரகமான புதன். மரகதம் புதனுக்கான ராசிக்கல். இது தவிர வைரம், முத்து அணியலாம்.
கடக ராசி: எச்சரிக்கை கிரகமான சந்திரன் கடக ராசிக்காரர்களை ஆளுகிறது. இவர்களுக்கு உகந்தது முத்து, கனக புஷ்பராகம்.
சிம்ம ராசி: சிம்மம் சூரியனால் ஆளப்படுகிறது மற்றும் சூரியனுக்கான ராசிக்கல் மாணிக்கம், மேலும், புஷ்பராகம் அணியலாம்.
கன்னி ராசி: புதனால் ஆளப்படும் கன்னிக்கு உகந்த ரத்தினம் மரகதம். வைரமும் அணியலாம்.
துலாம் ராசி: சுக்கிரனால் கட்டுப்படுத்தப்படும் துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். மேலும், நீலம் அணியலாம்.
விருச்சிக ராசி: செவ்வாய் ஆளும் விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இது தவிர கனக புஷ்பராகம் அணியலாம்.
தனுசு ராசி: குரு ஆளும் தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். தவிர நீலமும் அணியலாம்.
மகர ராசிக்கு அதிபதி சனி பகவான். இவர்கள் நீலம், வைரம் அணியலாம். இவர்கள் வைரம் அணிவது மிகுந்த நன்மையை கொடுக்கும்.
கும்ப ராசி: கும்ப ராசிக்கும் அதிபதி சனி பகவான். எனவே இவர்களும் வைரம், நீலம் அணியலாம்.
மீன ராசி: மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம், முத்து வைரம் ஆகியவை.