வளமான உக்ரைனின் பாரம்பரிய கலாச்சாரம்

Mon, 28 Feb 2022-2:00 pm,

உக்ரேனின் நெசவுத் தொழில் பாரம்பரியமானது. உக்ரேனிய கலாச்சாரத்தில், குறிப்பாக உக்ரேனிய திருமண மரபுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உக்ரேனிய எம்பிராய்டரி, நெசவு மற்றும் சரிகை தயாரித்தல் ஆகியவை பாரம்பரிய நாட்டுப்புற உடை மிகவும் பிரபலமானவை. பாரம்பரிய கொண்டாட்டங்களில் கைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பாரம்பரிய உக்ரேனிய ஆடைகள் உலகின் மிகவும் நாகரீகமான மக்களுக்கும் பிடித்தமானவை. உக்ரேனின் பாரம்பரிய சின்னமான எம்ப்ராய்டரி சட்டை அல்லது ரவிக்கை, வைஷிவாங்கா (Vyshyvanka) என்று அழைக்கப்படுகிறது. முக்கியமான நாட்களில் மட்டுமல்ல, நம் நாட்டில் சேலையைப் போல பலராலும் விரும்பி அணியப்படும் உடையாக உள்ளது வைஷிவாங்கா. பல பிராண்டுகள் vyshyvankaவின் சொந்த பதிப்பை உருவாக்கியுள்ளன.

ஈஸ்டர் பண்டிகையின்போது, உக்ரேனிய மொழியில்  முட்டைகளில் ஓவியம் வரைவது பண்டைய பாரம்பரியம். இந்த நடைமுறைக்கு பைசங்கா என்று பெயர். மெழுகு கொண்டு உருவாக்கப்படும் wax-resist method என்ற முறையைப் பயன்படுத்தி பாரம்பரிய உக்ரைன் முறைப்படி அலங்கரிக்கப்பட்ட முட்டைகள், நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பபபடுகிறது. இந்தத் திருவிழாவின்போது, அலங்கரிக்கப்பட்ட முட்டைகள், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசாக வழங்கப்படுகின்றன.

 (Photograph:Twitter)

உக்ரேனிய கலாச்சாரத்தில் நடனம் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது, இது கிமு மூன்றாம் நூற்றாண்டில் உருவானதாக நம்பப்படுகிறது. பாரம்பரிய உக்ரேனிய நடனம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கலாச்சாரங்களில் ஒன்றாகும், மேலும் மக்கள் கையால் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடை மற்றும் அதனுடன் இணைந்த நாட்டுப்புற இசையுடன் இந்த நடனத்தை ஆடுகின்றனர்.  

நாட்டில் கலினா, ப்ரைவிடன்யா மற்றும் ஹோபக் போன்ற பல்வேறு வகையான நடனங்கள் உள்ளன

தற்போது, ​​ஐரோப்பிய நாட்டில் பல்வேறு நடனக் குழுக்கள் தங்கள் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க பகுதி நடன வடிவங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

உக்ரைனில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறார்கள். கிழக்கு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம் மற்றும் கிழக்கு கத்தோலிக்கம் மற்றும் ரோமன் கத்தோலிக்கம் ஆகியவை மிகவும் பரவலாக நடைமுறையில் உள்ள மூன்று மதங்களாகும். உக்ரேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் நாட்டில் மிகப்பெரியது. 

 

மலாங்கா என்பது உக்ரேனிய மற்றும் பெலாரஷ்ய நாட்டுப்புற விடுமுறை தினம் ஆகும், இது ஜனவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது, ஜூலியன் நாட்காட்டியின்படி புத்தாண்டு விடுமுராஇ நாள் ஆகும். 

கிறிஸ்தவ விடுமுறைகள் எப்போதும் உக்ரைனில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. பல நாடுகளைப் போலவே, உக்ரைனிலும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து ஜனவரி 13-14  வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஜனவரி 19 அன்று இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் நடந்த நாளாக கருதப்படுகிறது. இது உக்ரேனியர்களுக்கும் மிகவும் முக்கியமானநாள்.

இந்த நாளில், குளிர்ந்த நீரில் குளிப்பது ஒரு பாரம்பரியம், அந்த நீர் புனிதமானது மற்றும் நோய்களில் இருந்தும் குணப்படுத்தும் சக்தி கொண்டது என்று நம்பப்படுகிறது,  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link