SBI Alert: 22% க்கும் அதிகமான வருமானத்தை வழங்கும் ஸ்டேட் பாங்கின் அசத்தல் திட்டம்
நீங்கள் அதிக வட்டி வருமானம் வேண்டும் என விரும்பினால், அதற்கான எஸ்பிஐ முதலீட்டு திட்டம் ஒன்று உள்ளது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 22 சதவீத வருமானத்தை வழங்கிய எஸ்பிஐ திட்டத்தின் பெயர் எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் (SBI Small Cap Fund) -நேரடி திட்டம்.
முதலீட்டின் தரத்தில், நான்கு நட்சத்திர மதிப்பிடப்பட்ட எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் - நேரடித் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 22.23 சதவீதத்தை வழங்கியுள்ளது.
எஸ்பிஐயின் இந்த திட்டத்தில் 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு செய்யலாம். இதில், முதலீட்டின் வட்டி விகிதம் டெர்ம் டெபாஸிட்களுக்கு பொருந்தும். உதாரணமாக, நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், ஐந்து வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) பொருந்தும் வட்டி விகிதத்தின் படி வட்டி கிடைக்கும்.
மைனர் உட்பட வங்கி இருக்கும் பகுதியில் குடியிருக்கும் நபர்கள் எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தைத் திறக்கலாம். இதை தனியான கணக்காக அல்லது கூட்டு கணக்காக திறக்கலாம்