நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால் உடலில் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா?
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் செரிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சமயத்தில் தண்ணீர் நேரடியாக மூட்டுகளில், வயிற்றில் தேங்குகிறது. இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
தண்ணீரை உட்கார்ந்து இருக்கும் போது குடிப்பது நல்லது. இதன் மூலம் தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், உணவை எளிதில் ஜீரணிக்கவும் உதவுகிறது.
ஒரே மூச்சில் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இப்படி குடிக்கும் போது சுவாசக் குழாயில் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். எனவே சிறிது சிறிதாக குடிப்பது உடலுக்கு நல்லது.
அதிக வெப்பமாக இருந்தாலும் கூலிங் தண்ணீரை குடிக்க வேண்டாம். ஏனெனில் இவை செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்த விநியோகத்தை தடுக்கிறது.
வீட்டில் இருக்கும் போது செம்பு, வெள்ளி டம்ளர்களில் தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் உடலுக்கு தேவையான தாதுக்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீரை குடிப்பது நல்லது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் அமைப்பு இருக்கும். எனவே அதிகமான தண்ணீரை குடிக்கும் போது உடலால் உறிஞ்ச முடியாமல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.