வீட்டு கடனை முன்கூட்டியே அடைத்து நிம்மதியாக இருக்க... சில ‘டிபஸ்’!
நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான ஆப்ஷன் உங்களுக்கு உள்ளது. உங்கள் கடன் காலம் 20 ஆண்டுகளாக இருந்தாலும், குறைந்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமிப்பீர்கள். உங்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
உங்களிடம் உள்ள கடனின் வகையைப் பொறுத்து, உங்கள் மாதாந்திர தவணையை அதிகரிக்க இது உங்களுக்கு உதவும். மாதாந்திர கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் கடனை முன்கூட்டியே அடைத்து விடலாம். அல்லது குறிப்பிட்ட தொகையை மொத்தமாக, வருடத்திற்கு ஒரு முறை அடைப்பதன் மூலம் அசல் தொகையும் வட்டியும் குறைந்து கொண்டே செல்லும்.
கடனின் காலப்பகுதியில் உங்கள் வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் உங்களுக்கு வங்கி நிவாரணம் வழங்க முடியுமா என்பதை உங்கள் வங்கியுடன் ஆலோசிக்கலாம். இது முடியாவிட்டால், குறைந்த வட்டியில் கடனளிக்கு ம் வங்கிக்கு உங்கள் கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம். இதனால், உங்கள் வட்டியும் இஎம்ஐ தொகையும் குறையும். இதனால், பழைய இஎம்ஐ தொகையை குறைக்காமல், புதிய வங்கியிலும் அதே அளவிற்கு இஎம்ஐ தொகை செலுத்தி வந்தால், கடனை வெகு சீக்கிரம் அடைத்து விடலாம்.
மொத்தத் தொகையைச் செலுத்துவதன் மூலம் உங்கள் வீட்டுக் கடன் காலத்தைக் குறைக்கலாம். உங்கள் வருமானம் அதிகரித்து, கூடுதல் பணம் வருமானமாக வந்தால், நீங்கள் உங்கள் வங்கியுடன் பேசி கூடுதல் பணம் செலுத்தி கடன் காலத்தை குறைக்கலாம். அதே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த முடியுமா இல்லையா என்பதை நீங்கள் உறுதியாக நம்பினால் மட்டுமே இதனை செய்ய வேண்டும்.
கூடுதல் மொத்தத் தொகையைச் செலுத்துவதன் மூலம் உங்கள் கடனை முன்கூட்டியே முடித்துக்கொள்ளலாம். இதில் வட்டி மற்றும் அசல் தொகையை உள்ளடக்கிய பெரிய தொகையை வங்கியில் செலுத்தினால், கடன் காலம் கணிசமாக குறையும்.
வீட்டுக் கடனைத் தவிர, வேறு சில சிறிய கடன்களும் உள்ளது என்றால், உங்கள் கடன்களை ஒருங்கிணைத்து செலுத்துவது சிறந்தது. அதாவது, பல கடன்களை ஒன்றாக இணைத்து ஒரே கடனைப் போல நிரப்பலாம். இது உங்களுக்கு அதிக வட்டி செலுத்தும் சுமையையும் குறைக்கும்.
வீட்டுக் கடன்கள் மட்டுமின்றி, பெரும்பாலான கடன்களை முன்கூட்டியே செலுத்துவதற்கும் அபராதம் விதிக்கப்படும். கடன் காலம் முடிவதற்குள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பினால், முன் கூட்டியே பணம் செலுத்தும்போது எந்த வகையான அபராதம் விதிக்கப்படும் என்பதை முதலில் உங்கள் வங்கியுடன் பேசி தெரிந்து க்கொள்ளவும். அபராதம் செலுத்துவதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் பயனடைவீர்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் முன்கூட்டியே செலுத்தும் ஆப்ஷனை கண்டிப்பாக தேர்ந்தெடுக்கலாம்.