அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படுகிறதா... ‘இவை’ காரணமாக இருக்கலாம்!

Wed, 23 Aug 2023-12:10 pm,

நெஞ்சில் வலி வந்தால், சிலர் வாய்வு வலியாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று அஞ்சி மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். மாரடைப்பு வருவது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், நெஞ்சு வலிக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கலாம்.

வறட்டு இருமல் காரணமாக, மார்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த தசைகள் பலவீனமடைந்து வலியை ஏற்படுத்துகிறது. இருமல் விரைவில் குணமடையவில்லை என்றால், வலி ​​அதிகரிக்கும். எனவே அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவும்

இரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்லும் தமனிகளில் ரத்தம் உறைதல் ஏற்படும் நிலை  நுரையீரல் தக்கையடைப்பு என்பதாகும். இது  மார்பு வலியை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை, இது இதயப் பிரச்சனையாகும், நுரையீரலுக்கு ரத்தம் சரியாகச் செல்லாமல் நெஞ்சுவலி வர ஆரம்பிக்கும். ரத்தம் உறைவதால்  ஏற்படும் கட்டிகள் நுரையீரலுக்குச் செல்லும் இரத்தத்தின் இயல்பான ஓட்டத்தைத் தடுப்பதால், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது.

நிமோனியா அல்லது நுரையீரலில் தொற்று ஏற்பட்டால், நுரையீரலின் காற்றுப் பைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். பின்னர் அது நெஞ்சு வலிக்கு காரணமாகிறது

மன அழுத்தம், குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, கோபம், வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மனப் பதற்றம், ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

நெஞ்சு வலி சில நேரங்களில் மார்பு பகுதியில் தசைப்பிடிப்பு உண்டாவதால் ஏற்படுகிறது. அதிக பளு தூக்குதல், குழந்தையை தூக்குவது, கனமான பொருள்களை தூக்கி மேலே ஏறுவது போன்றவை எல்லாமே மார்பு வலிக்கு காரணமாக இருக்கலாம்.  

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link