வக்ர குருவால் லட்சுமி குபேர யோகம்.. பண யோகம் இந்த ராசிகளுக்கு தான்
குரு வக்ர காலம்: செப்டம்பர் 4-ம் தேதி காலை 9.15 மணி மேஷ ராயிலேயே பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் மாதம் வரை இந்த குரு வக்ர காலம் இருக்கும். இந்த குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பல அற்புதமான மாற்றங்களை பெற போகின்றனர். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
மேஷ ராசி: மேஷ ராசியில் குரு வக்ரமடைவதால் கடந்த காலங்களில் இருந்த வீண் விரையம், வருமான தடை நீங்கும். இனி வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு இருக்கும். எல்லா கனவுகளும் நனவாகும் அற்புத காலம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.
ரிஷப ராசி: குரு பகவான் ரிஷப ராசியின் 12 ஆம் இடத்தில் பயணம் செய்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் வீடு, வாகனம் யோகம் வரும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு பயணம் ஏற்படும். நன்றாக பணம் சம்பாதித்து அசையா சொத்துக்களை வாங்கி குவிக்கும் நேரம்.
மிதுன ராசி: வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான், உங்களின் வியாபாரத்தில் நிறைய லாபத்தை தரப் போகிறார். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தலைமை பொறுப்புகள் தேடி வரலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடக ராசி: பத்தாம் வீட்டில் குரு 2,4,6 ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிரிகள் தொல்லை ஒழியும். சட்ட ரீதியாக வெற்றி கிடைக்கும்.
தனுசு ராசி: குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உங்களின் செல்வாக்கு உயரும். சொந்தபந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்களை நடத்துவீர்கள். விஐபிக்களுடன் நட்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் அழகு ஆரோக்கியமும் கூடும். உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும்.
மகர ராசி: தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். வீட்டிற்குள் திடீர் பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு திடீர் புரமோசன் தேடி வரும். பண மழையில் நனைவீர்கள்.
கும்ப ராசி: குரு பகவான் வக்ரமடையும் செப்டம்பர் 4 முதல் உங்களுக்கு அற்புதமான காலகட்டம். உங்களின் வருமானம் உயரும். உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அரசு வழி விவகாரங்களில் பிரச்சினை வரலாம் அலட்சியமாக இருக்காதீர்கள்.
மீன ராசி: இந்த நேரத்தில் புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். செப்டம்பர் 4ஆம் தேதிக்கு மேல் உங்களின் சமயோஜித புத்தி அதிகமாகும். மனைவி வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். மனைவி வழியில் சொத்துக்களும் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.