இங்கிலாந்து அணியை இந்த பிளான் வச்சு தான் வீழ்தினோம் - லஹிரு குமாரா

Thu, 26 Oct 2023-10:56 pm,

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

 

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் முதல் விக்கெட்டாக டேவிட் மலான் மேத்யூஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியதும் அடுத்ததாக உடனடியாக அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் ரன் அவுட் மூலம் வெளியேறினார். 

 

அதன் பின்னர் வந்த எந்த ஒரு வீரருமே பெரிய அளவில் ரன்களை சேர்க்காததாலும், பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் போனதாலும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். இந்த சரிவு வெகுவிரைவாகவே அவர்களது ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. 

 

அந்த வகையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் 33.2 ஓவர்கள் மட்டுமே சந்தித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 156 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 2 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரா 7 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டு கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

 

அவரது பந்து சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் லஹிரு குமாரா கூறுகையில் :

 

இங்கிலாந்து போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக இப்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி. இன்றைய போட்டியில் நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நான் கடந்த போட்டியிலிருந்து இந்த போட்டிக்காக என்னுடைய பந்துவீச்சில் பெரிய திட்டங்களை மாற்றிக் கொள்ளவில்லை. 

 

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது எனது பந்துவீச்சு சிறப்பாக இல்லை. ஆனால் இன்றைய போட்டியில் நான் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதற்காக தீவிர வலை பயிற்சியை மேற்கொண்டேன். அதன் பலனாகத்தான் இன்றைய போட்டியில் நான் சிறப்பாக பந்துவீசி உள்ளேன்.

 

மேத்யூஸ் போன்ற ஒரு அனுபவ வீரர் அணிக்குள் மீண்டும் வரும்போது அது நல்ல உத்வேகத்தை தந்துள்ளது. அவர் எனக்கு தனிப்பட்ட வகையில் நல்ல ஆதரவை கொடுத்து இடைவெளிகளின் போது ஆலோசனைகளையும் வழங்கினார். 

 

இன்றைய போட்டியில் என்னுடைய திட்டம் எல்லாம் மிகவும் சிம்பிளாகவே இருந்தது. அதாவது மிடில் ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் ஒழுக்கமாக பந்துவீசி விக்கெட்டுகளை பரிசாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அந்த திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தியதாக லஹிரு குமாரா மகிழ்ச்சியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link