வரி செலுத்துவோர் கவனத்திற்கு! ஜூலை 31 க்கு முன் ITR தாக்கல் செய்து விடுங்கள்!

Tue, 25 Apr 2023-11:16 pm,

வரி செலுத்துவோர் எந்தவிதமான அபராதத்தையும் தவிர்க்க, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்தால் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஜூலை 31-க்கு முன் ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் சலுகைகள்.

 

கடைசி தேதி வரை நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், விதிகளின்படி, நீங்கள் ரூ 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர, ஐடிஆர் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய வரிக்கான வட்டியையும் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் தொடர்ந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், எந்த அரசு அல்லது தனியார் வங்கியும் எளிதாக கடன் கொடுக்க தயாராகிவிடும். ITR என்பது எந்த வகையான கடன்களை பெறுவதற்கும் முக்கியமான ஆவணமாகும்.

வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவுகள் 70 மற்றும் 71 ஒரு குறிப்பிட்ட ஆண்டின் இழப்பை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்வதற்கான சில விதிகளைக் கொண்டுள்ளது. இதன் பொருள் உங்கள் இழப்பை அடுத்த மதிப்பீட்டு ஆண்டிற்கு நீங்கள் கொண்டு செல்லலாம்.

 

நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது அரசாங்கம் சில விலக்குகளை அனுமதிக்கிறது. இது வரி செலுத்துவோர் மீதான சுமையை குறைக்க உதவுகிறது. இது மேலும் மேலும் பலரை ஐடிஆர் தாக்கல் செய்ய தூண்டுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link