சுக்கிரன் பொழியும் அதிர்ஷ்ட மழையில் நனைந்து பணத்தில் கொழிக்கப் போகும் ராசிகள்
வருட இறுதியில் சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். சுக்கிரனின் சுப பலன்களுக்கு, தினமும் 24 முறை "ஓம் ஷூன் சுக்ரே நமஹ்" என்று ஜபிக்கவும்.
மீன ராசிக்காரர்களுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். இந்த காலகட்டத்தில், அதிக சுப பலன்களைப் பெற வியாழக்கிழமைகலில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடவும்.
சுக்கிரனின் சஞ்சாரம் துலாம்ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வசதிகளையும் அதிகரிக்கும். 2023 இல் வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், நல்ல செய்தி கிடைக்கும்
டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிக்கப் போவதால், மகர ராசியினருக்கு சுப பலன்கள் அதிகமாக இருக்கும். லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தக்க வைத்துக் கொள்ள, செம்பருத்திப் பூவை அன்னைக்கு சாற்றவும்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். இதன் போது, லட்சுமி தேவியை தவறாமல் தியானியுங்கள்.