Australia island: இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் சீனா..!!!
சமீபத்திய நாட்களில் ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கு இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கெஸ்விக் தீவின் ஒரு பகுதியை வாங்கியுள்ள சீனாவின் சீனா ப்ளூம் என்ற நிறுவனம் அங்கு ஆஸ்திரேலியர்கள் நுழைவதை தடை செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. உள்ளூர்வாசிகள் தீவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றும், பொது சாலைளை பயன்படுத்துவதை நிறுவனம் தடை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், சீன நிறுவனமான சீனா ப்ளூம் கடந்த ஆண்டு தீவின் ஒரு பகுதியை 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.
இயற்கை அழகு நிறைந்த இந்த தீவு மத்திய கிழக்கில் உள்ள குயின்ஸ்லாந்திலிருந்து 34 கி.மீ தூரத்தில் உள்ள மக்கேயில் அமைந்துள்ளது.
சீன நிறுவனமான சீனா ப்ளூம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் தீவின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்த பின்னர் அங்குள்ள குடிமக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீன நிறுவனம் தீவை முற்றிலுமாக கைப்பற்றியதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆஸ்திரேலிய மக்கள் அங்கு படகுகள், பிற பொது போக்குவத்து வழிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இதனால் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.
ஒயாசிஸ் தேசிய பூங்காவின் 80 சதவீத பகுதி ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. சீன நிறுவனம் 20 சதவீத பகுதியை மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆனால் இப்போது நிறுவனம் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி தேசிய பூங்காவிற்கு மக்கள் வருவதை தடை செய்கிறது.
ஏற்கனவே தீவில் வசிக்கும் மக்கள் வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சீன நிறுவனம் தீவுக்கான சுற்றுலாவை நிறுத்தியுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். Airbnb ஏன்னும் நிறுவனம் மூலம் சுற்றுலாப் பயணிகள் வீட்டை வாடகைக்கு எடுப்பார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சுற்றுலாப் பயணிகள் யாரும் வாடகைக்கு வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீவு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்தாக மாறிவிட்டது என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தீவின் முன்னாள் குடியிருப்பாளரான ஜூலி வில்லிஸின் கூறுகையில், சீன நிறுவனம் தீவில் ஆஸ்திரேலிய குடிமக்களைப் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் தீவை சீன சுற்றுலா சந்தைக்கு மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்கள். சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்றார்.