ஐபிஎல் வரலாற்றில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத 5 ஸ்டார் பிளேயர்கள்!

Mon, 16 Sep 2024-12:26 pm,

இன்றைய தலைமுறை வீரர்கள் டி20 போட்டிகளுக்காக மட்டுமே தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கெய்ல், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் அதிக ரெகார்ட் வைத்து இருந்தாலும், ஒரு சிக்ஸர் கூட ஐபிஎல்லில் அடிக்காத வீரர்களை பற்றி பார்ப்போம். 

 

மைக்கேல் கிளார்க் (Michael Clarke)

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 2012 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் 5 ஆட்டங்களில் ஒரு சிக்ஸர் அடிக்காமல் 98 ரன்கள் மட்டுமே அடித்தார்.

சோயப் மாலிக் (Shoaib Malik)

பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடினார். ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தம் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர் கூட இல்லை.

ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra)

இந்திய முன்னாள் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் இரண்டு சீசன்களில் விளையாடினார். ஆனால் ஒரு சிக்ஸர் கூட அடித்தது இல்லை.

மைக்கேல் கிளிங்கர் (Michael Klinger)

ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளிங்கர் 2011 சீசனுக்கு முன்பு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடினார். மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி 73 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு சிக்ஸர் கூட இல்லை.

கால்ம் பெர்குசன் (Callum Ferguson)

ஆஸ்திரேலிய வீரர் கால்ம் பெர்குசன் 2011 மற்றும் 2012 இந்தியன் பிரீமியர் லீக்கில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 9 போட்டிகளில் 83.76 ஸ்ட்ரைக் ரேட்டில் 98 ரன்களை அடித்த இவர் ஒரு சிக்ஸர் கூட அடித்தது இல்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link