ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Mon, 15 Jul 2024-11:02 am,

மலையாள திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வரும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருந்த படம், ஆடுஜீவிதம். இந்த படத்தை தி கோட் லைஃப் என்றும் சிலர் கூறுகின்றனர். 

ஆடுஜீவிதம், முதலில் நாவலாக உருவானது. பென்யாமின் எழுதியிருந்த இந்த நாவல் 2008ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி (இதே தேதியில்) வெளியாகியிருந்தது. 

ஆடுஜீவிதம் படம் இந்த அளவிற்கு பலரது மத்தியில் பெரிதும் பேசப்பட காரணம், அதற்காக பலரும் எடுத்துக்கொண்ட கடின முயற்சியும் உழைப்பும்தான். குறிப்பாக நடிகர் பிருத்விராஜ் இதில் நடிக்க இரண்டு முறை உடல் எடையை அதிகரிக்க மற்றும் குறைக்க வேண்டியிருந்தது. 

தான் நடிக்கும் நஜீப் கதாப்பாத்திரத்திற்காக பெருமளவில் மெனக்கெட்ட அவர், ஒரு சில முறை ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் நடித்தாராம். 

ஆடுஜீவிதம் படம், பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த அளவிற்கான வெற்றியை பெறவில்லை. இருப்பினும் உலகளவில் இப்படம் 154.94 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தை, ப்ளெஸ்ஸி இயக்கியிருந்தார்.

ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பல நாட்களாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. காரணம், இந்த படத்தை ஆஸ்கர் மேடை ஏற்ற படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும் அதன் பிறகு இதன் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகிறது. 

ஆடுஜீவிதம் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link