ஜெயிலர் 2: ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் தனுஷ்!! Ex மாமனாரை எப்படி எதிர்கொள்வார்?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இவருக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்தனர்.
ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை வெளியிடுகிறேன் என நெல்சன் இதற்கு முன்னர் ஒரு நேர்கானலில் பேசியிருந்தார். இதையடுத்து, இப்படத்திற்கான கதை எழுதும் பணிகளை இவர் முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் 2 படத்தில், தனுஷும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
2002ஆம் ஆண்டில் இருந்து கோலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் தனுஷ், அவரது ரசிகர்களால் “நடிப்பின் அரக்கன்” என அழைக்கப்படுகிறார். இவர், தற்போது இளையராஜாவின் பயோபிக்கில் நடித்து வருகிறார்.
தனுஷ், ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரு மகன்கள் உள்ளனர். ரஜினியின் மாப்பிள்ளை என்பதை தாண்டி, அவரது மிகபெரும் ரசிகராக வலம் வந்தார், தனுஷ்.
பல வருடங்களாக ரஜினிகாந்தின் படம் ஒன்றில் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசை ஒரு வழியாக நிறைவேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நெல்சன், தனுஷுக்காக ஒரு பட கதையை தயார் செய்ய இருந்தாராம். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயிலர் இரண்டாம் பாகத்திலேயே தனுஷை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம் நெல்சன்.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். தனது ex மாமனாரை, தனுஷ் எப்படி ஷூட்டிங்கில் எதிர்கொள்வார் என்பது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.