கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ‘இவர்’ நடிக்க வேண்டியது!! யார் தெரியுமா?
2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம், 20 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனது. அப்போதும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
கில்லி திரைப்படத்தில், த்ரிஷா தனலக்ஷ்மி என்ற நாயகியின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
ஜெமினி, வின்னர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமான கிரண்தான் கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் பரிந்துரைக்கப்பட்டாராம்.
கில்லி பட வாய்ப்பு வந்தபோது, கிரண் வேறு ஒருவரை காதலித்து வந்தாராம். அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார்.
இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்த கிரண், தான் காதலித்த நபர் திரையுலகை சேர்ந்தவர் இல்லை என்றும், இதனால் கில்லி பட வாய்ப்பை தவற விட்டதாகவும் பேசியிருக்கிறார். இந்த நேர்காணல், கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் சமயத்தில் வைரலானது.
கிரண், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
இவர், தமிழில் ‘ஆம்பள’ படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். அதன் பிறகும் இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவை வந்த சுவடு தெரியாமல் சென்று விட்டன.
கிரண், தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகி சுய தொழில் ஒன்றை செய்து வருவதாக கூறப்படுகிறது.