பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ

Fri, 30 Aug 2024-12:01 pm,

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்களின் மிகவும் ஃபேவரைட்டான ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி.

 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பெரிய ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து, பல சீசன்களை கடந்த கடைசியாக 7வது சீசன் முடிந்தது. இதில் போட்டியாளர்களாக வந்திறங்கிய மாயா, பூர்ணிமா, ரவீணா, விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்டோர் கவனம் ஈர்த்தனர். இறுதியில், வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா டைட்டிலை வெல்ல, மணிச்சந்திரா ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, அக்டோபர் மாதத்தில் வழக்கமாக தொடங்கும். இந்த வருடமும் அதே மாதத்தில் தொடங்க நிகழ்ச்சி குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இதற்கான ஆடிஷனும் நடைப்பெற்று வருகிறது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இந்த சீசன் முதல் தான் விலகிக்காெள்வதாக சில வாரங்களுக்கு முன்பு அறிக்கையை வெளியிட்டார். 

 

இதைத்தொடர்ந்து வரவிருக்கும் புதிய தொகுப்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்திருக்கிறது. சரத்குமார், சிலம்பரசன், சூர்யா, விஜய் சேதுபதி என பல நடிகர்களின் பெயர் அடிப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8ன் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

 

அதன்படி தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள 18 போட்டியாளர்களின் புகைப்படம் கொண்ட பட்டியல் ஒன்று வைரலாகி வருகின்றது. இதோ முழு லிஸ்ட்.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link