3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல பாடகர் லியாம் பெய்ன் !
பாய்பேண்ட் ஒன் டைரக்ஷனின் முன்னாள் உறுப்பினர் லியாம் பெய்ன் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஹோட்டலில் மூன்றாவது மாடியில் பால்கனியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை.இவரை காப்பாற்ற சென்றபோது உயிரற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அர்ஜெண்டினாவில் பெய்ன் தங்கியிருந்த ஹோட்டலில் போதைபொருட்கள் மற்றும் மதுவிற்கு ஆளாகக்கூடிய நபர் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
பெய்ன் தற்கொலைக் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே பெய்ன் உடலை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அப்போது அவர் உயிரிழந்து பல நிமிடங்கள் ஆனதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.மேலும் அவர் உயிரிழந்ததை உறுதி செய்த போலீசார் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.
லியாம் பெய்ன் தனது 31ஆவது பிறந்தநாளை இங்கிலாந்தில் கொண்டாடிய வீடியோ ஸ்னாப்சாட்டில் பதிவிட்டிருந்தார்.இவர் முதலில் பிரிட்டிஷ் பாய்மேன்ட் ஒன் டைரக்ஷனில் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2010ல் "தி எக்ஸ் ஃபேக்டர்" ரியாலிட்டி போட்டி நிகழ்ச்சியில் லூயிஸ் டாம்லின்சன்,ஜெய்ன் மாலிக்,ஹொரன் மற்றும் ஹாரி ஸ்டைல்ஸ்,ஆகியோர் உள்ளடங்கிய இசைக்குழுவினருடன் UKவில் இணைந்தார்.
அக்டோபர் 2 அன்று பெய்ன் அர்ஜென்டினாவில் தனது முன்னாள் இசைக்குழுவினருடன் கச்சேரியில் நியால் ஹொரனுடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெய்ன் வீடியோவை சமூக வலைத்தளபக்கத்தில் ஸ்னாப்சார்டில் பதிவிட்டிருந்தார்.
லியாம் பெய்ன் தங்கியிருந்த பியூனஸ் அயர்ஸ் ஹோட்டலின் மேலாளர் பெய்னுக்கு 911 கால் செய்ததாகவும்,அப்போது அவர் கால் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியது எனக் கூறப்படுகிறது.
லியாம் பெய்ன் அளவுக்கு மீறி அதிக மதுபோதையில் இருந்திருக்கலாம் என போலீசாரும்,ஹோட்டலின் மேலாளரும் இவரின் தற்கொலைக் குறித்துக் கூறுகின்றனர்.