ஹாரி பாட்டர் புகழ் நடிகை 89 வயதில் மரணம்!! ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி..
ஹாரி பாட்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் மேகி ஸ்மித். இவர், Professor McGonagall கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹாரி பாட்டர் படத்தில் எத்தனையோ கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில கேரக்டர்கள் மட்டும்தான் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதில் ஒருவர், இந்த Professor McGonagall.
மேகி ஸ்மித் ஹாரி பாட்டர் படம் மட்டுமன்றி, ரோமியோ ஜூலியட், ஹாட் மில்லியன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேகி ஸ்மித், 1934ஆம் ஆண்டு பிறந்தவர். முதலில் மேடை நடிகையாக இருந்து பின்னர் திரைப்பா நடிகையாக மாறினார்.
மேகி ஸ்மித் நடிப்பில் நூற்ற்க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கிறது.
மேகி ஸ்மித், வயது மூப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேகி ஸ்மித்தும், டம்புள்டோர் கதாப்பாத்திரத்தில் நடித்த மைக்கில் காம்போன் கடந்த ஆண்டு 27ஆம் தேதி செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். தற்போது அதே தேதியில், இவரும் உயிரிழந்தார்.
மேகி ஸ்மித்தின் உயிரிழப்பு, ஹாரி பாட்டர் ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறது.