சூர்யா-ஜோதிகாவின் மகன்-மகள் போட்டோக்கள்! பார்க்க அப்பா அம்மா போல இருக்காங்களே..

Fri, 01 Nov 2024-10:00 am,

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சூர்யா-ஜோதிகாவிற்கு தியா-தேவ் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும், தற்போது தங்களின் தாய்-தந்தையுடன் மும்பையில் இருக்கின்றனர். 

சூர்யாவும் ஜோதிகாவும், சென்னையில்தான் பல ஆண்டுகளாக இருந்தனர். சமீபத்தில்தான் இவர்கள் மும்பைக்கு ஷிஃப்ட் ஆகினர்.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் பயின்று வந்த தியா-தேவ், இப்போது மும்பையில் இருக்கும் ஒரு பிரபல பள்ளியில் பயின்று வருகின்றனர். 

சூர்யா ஒரு பக்கம் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வர, ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் படங்களில் முக்கிய பாத்திரமாக தோன்றி வருகிறார். 

சூர்யா, ஜோதிகாவின் மகள் தியா சமீபத்தில் தனது பள்ளிக்காக ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை டைரக்ட் செய்து, அதற்காக பரிசையும் பெற்றார். 

தேவ், சில மாதங்களுக்கு முன்பு தற்காப்பு பயிற்சியில் ப்ளாக் பெல்ட் வென்றார். 

சினிமா குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் என்றாலும், திரைத்துறை மீது கவனம் செலுத்தாமல், தங்களுக்கு பிடித்த விஷயங்களை மீது தியாவும் தேவ்வும் செய்து வருகின்றனர். 

தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை, ஜோதிகா வெளியிட்டிருக்கிறார். இதில் பார்ப்பதற்கு தியா ஜோதிகா போல இருப்பதாகவும், தேவ் சூர்யா போல இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link