ஒரு குழந்தைக்கு நயன்தாரா முகம்..இன்னொரு குழந்தைக்கு விக்கி முகம்!! உயிர்-உலக் போட்டோஸ்..

Sat, 16 Nov 2024-11:38 am,

தமிழ் திரையுலகில் பிரபலமான ஜோடிகளாக விளங்குபவர்கள், நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

காதல் தோல்விகளை சந்தித்து, சில ஆண்டுகள் சிங்கிளாக இருந்த நயன், கடைசியாக காதலில் விழுந்த நபர்தான் விக்னேஷ் சிவன். 

நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்துக்கொண்ட நயன்-விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில் நட்புடன் பழகினர். பின்னர், இது காதலாக மாறியது. 

2022ஆம் ஆண்டு இறுதியில், வாடகைத்தாய் மூலம் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். 

இந்த குழந்தைகளின் பெயர், உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்விக். இவர்களுக்கு இப்போது 2 வயது ஆகி விட்டது. இதையடுத்து இவர்கள் குடும்பத்துடன் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து வருகின்றனர். 

இந்த குழந்தைகள் இரண்டும், சுருள் முடியுடன் அப்படியே பார்ப்பதற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் போலவே இருக்கின்றன. 

உயிர்-உலக் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வேட்டி சட்டை அணிந்திருக்க, அவர்களுடன் நயன்தாரா புடவை கட்டி போஸ் கொடுத்திருக்கிறார். 

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் சில நாட்களில் வெளியாக இருப்பதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 

இந்த க்யூட் புகைப்படங்களை பார்த்தவர்கள், இதற்கு லைக்ஸ் மழைகளை பொழிந்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link