RC15: இயக்குநர் ஷங்கரின் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
RC15 திரைப்படத்தில் ராம் சரணின் பாத்திரம் போலீஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜே.டி. லட்சுமி நாராயணனின் வாழ்க்கையை ஒத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓஎம்சி ஊழல், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி வழக்கு, சத்யம் ஊழல் என பல முக்கிய வழக்குகளை கையாண்டவர் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி லட்சுமி நாராயணா.
காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் விசாகப்பட்டினம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டார்.
ஹைதராபாத்தில் படத்தின் பூஜை நடைபெற்றது, இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், பிரபல இயக்குனர் ராஜமௌலி மற்றும் ராம் சரண் தந்தை சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஷங்கரின் இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார், ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.