OTT Releases : இந்த வார ஓடிடி ரிலீஸ்!! எல்லாமே புதுப்படம்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
நடிகை நயன்தாராவின் திருமண-ஆவணப்படமான ‘நயன்தாரா : பியாண்ட் தி ஃபேரி டேல்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸில் வரும் நவம்பர் 18ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது.
பிரபு தேவா நடிப்பில் வெளியான பேட்ட ராப் திரைப்படம், நவம்பர் 15ஆம் தேதியன்று அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது.
விமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சார் திரைப்படம், நவம்பர் 15ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்தியாவில் டெட்பூல் ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கான ட்ரீட் ஆக தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் Deadpool And Wolverine படம் வெளியாகி இருக்கிறது.
இசைக்கலைஞர்களின் வாழ்வை எடுத்து சொல்லும், தி பியானோ லெசன் திரைப்படம், நவம்பர் 22ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும் வகையில், Spell Bound திரைப்படம், வரும் நவம்பர் 22ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்த படம், கிஷ்கிந்தா காந்தம். இந்த படத்தை, வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெனிஃபர் விக்மொர் மற்றும் ஆல்டிஸ் ஹாட்ஜ் நடித்திருக்கும் தொடர், Cross. இந்த மிஸ்டரி த்ரில்லர் தொடரை, நவம்பர் 14ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.